இவர் நடிகர் பி. எஸ் வீரப்பா அவர்களின் மகன் ஹரிஹரன் அவர்கள்!
சினிமாவில் வில்லன் நடிகருக்கென்று நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியவர் பி.எஸ்.வீரப்பா. கதாநாயகர்களுக்கு நிகரான சம்பளம் வாங்கிய வில்லன் நடிகர். அவருக்கு தனலட்சுமி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் இருந்தனர். பி.எஸ்.வீரப்பா மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஹரிஹரன் திரைப்பட தயாரிப்பில் இறங்கினார். திசை மாறிய பறவைகள், சாட்சி, வெற்றி, நெஞ்சில் துணிவிருந்தால் நட்பு, வணக்கம் வாத்யாரோ உள்பட 30 படங்கள் வரை தயாரித்தார்.
படத் தயாரிப்பால் சொத்துக்களை இழந்த ஹரிஹரன் வறுமை நிறைந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார். வாடகை வீட்டில் வசித்து வந்த ஹரிஹரனுக்கு, வாடகையைக் கூடச் செலுத்த முடியாத நிலை உருவானது. இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தாமாகவே முன்வந்து ரூ.1 லட்சம் கொடுத்து உதவினார்.
வீட்டில் தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.