நம்மில் பலருக்கு நரை முடி பிரச்சனை இருக்கும். இதற்கு நாம் ஹேர் டையை உபயோகிப்போம்.
ஆனால் அவசரமாக வெளியே கிளம்பும் போது தலைக்கு குளித்து காய வைத்து, மறுபடி ஹேர் டை உபயோகித்து, தலையை அலசிச் செல்ல நேரம் இல்லா சமயத்தில் இந்த இன்ஸ்டண்ட் ஹேர் டை பேக் உங்களுக்கு உபயோகப்படும்.
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலா இல்லாத பிளைன் டீத்தூள் - 2 டீ ஸ்பூன்
கடுகு எண்ணெய்
செய்முறை:
ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கருஞ்சீரகத்தை 2 டேபிள் ஸ்பூன் அளவு போட்டு வறுக்கவும் அது வறுபடும் போதே அதனுடன் டீத்தூள் 2 டீ ஸ்பூன் சேர்த்து நன்கு வறுக்கவும்.
புகை வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு நன்கு வறுக்கவும்.
இரண்டும் நன்கு வறுபட்டு கருஞ்சீரகம் வாசனை வரும்.
நன்கு வறுபட்டவுடன் அதனை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
ஆறிய பின் அதனை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.
அதன் பின் அந்தக் கலவையை கையால் அலைந்து பாருங்கள் நைசாக இல்லையென்று உங்களுக்கு தோன்றினால் சல்லடையால் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலிலோ அல்லது பிளாஸ்டிக் டப்பாவிலோ சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வெளியே அவசரமாக கிளம்பும் போது உங்களுக்கு தேவைப்படும் அளவு இந்தக் கலவையை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து தலையில் அப்ளை செய்து விட்டு 10 நிமிடத்தில் நீங்கள் வெளியே கிளம்பி விடலாம் தலையில் தேய்த்து சீவியது போல் மட்டுமே இருக்கும்.
நீங்கள் அடுத்து தலையை அலசும் வரை இது உபயோகப்படும்.
இதை நீங்கள் ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
இந்தக் கலவையை முடியின் வேர்க்கால்களில் படும் படி நன்கு தேய்த்து 1 மணி நேரம் கழித்து அலசலாம்.
இதை அடிக்கடி செய்து வர தலைமுடி இயற்கையாகவே கருமையாக வளரத் தொடங்கும்.
கடுகு எண்ணை தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும்.