இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் மேற்கொண்டார்.
ஒரு வார கால ஆன்மிக பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருக்கிறார். முதலாவதாக ரிஷிகேஷ் (Rishikesh) சென்ற அவர், இரண்டாவது நாளில் பத்ரிநாத் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், தனது ஆன்மிக நண்பர்களுடன் அங்கிருந்து இமயமலையில் உள்ள பாபாஜி குகை நோக்கி புறப்பட்டார். காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.
இந்நிலையில், பாபாஜி குகைக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்கு நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார். தற்போது அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதத்தில் இமயமலைக்கு அவர் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.