Feed Item
·
Added a post

கம்பை ஊன்றியபடி தள்ளாடி உள்ளே வந்தார் சபேசன்.. வயது.90.

அவர் வீட்டு புரோகிதர்.. கிச்சாமி கம்பீரமாக நாலு சிஷ்யர்கள் புடை சூழ கூடத்தில் அமர்ந்திருந்தார்.

வாங்கோ சபேசன்..மாமா.. உங்க வீட்Lடுல சமீபத்துல எந்த ஸ்ரார்த்தமும் கிடையாதே.. என்ன விஷயம்?

ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்.. நீங்கோ செத்துப் போனவாளுக்கு 13 நாள் காரியம் பண்ண எத்தனை பீஃஸ் வாங்கறேள்..?

குறைஞ்ச பட்சம் சாதாரணமா செஞ்சா ஒன்னரை லட்சம் ஆகும். யாருக்கு?

எனக்குத்தான்.. என்று முகத்தை துடைத்துக் கொண்டார்.. சபேசன்..

சாஸ்த்திரிகளுக்கு தூக்கி வாரி போட்டது.. என்ன ஆச்சு உங்களுக்கு?

என்னோட ஜாதகம் பார்த்தேன்.. இன்னும் ஒரு மாசம்தான் இருப்பேன்..என் பையனும் ரிடையர் ஆயிட்டான்..பென்ஷன் கிடையாது சொற்ப வருமானத்தில் என்னை நல்லா பார்த்துக் கிறான்.. நான் இருக்கற வீடு ஒன்னுதான் சொத்து.. அவன் ஆத்துக்காரிக்கும் விவரம் பேறாது..கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா..நீங்கோ செலவை இழுத்துவிட்டுட்டா..பாவம் அவன் வீட்டுல மேல கடன் வாங்கி செய்வான்.. என் மேல அவனுக்கு பாசம் அதிகம்..

கண்களைத் துடைத்துக் கொண்டார் சபேசன்..

மஞ்சள் பையைதிறந்து ஒரு 500 ரூபாய் கட்டை எடுத்து அவர் முன்னால் வைத்தார். இது நான் சிறுக சிறுக சேமிச்சது.. நான் போயிட்டா என் பையனுக்கு பேரம் பேசத் தெரியாது.. பேரம்னு எடுக்காம ரிக்வஸ்ட்டா எடுத்துக் கோங்கோ.. இந்த ஐம்பதாயிரத்துலயே ஒரு மந்திரம் விடாம சொல்லி என்னை வழி அனுப்பிடுஙகோ.. உங்களுக்கு புண்ணியமாக போகும்..

கிச்சாமி சாஸ்த்திரிகள் ஆடிப்போய்விட்டார். இந்த பணத்தை உள்ள வையுங்கோ.. உங்க வீட்டு கல்யாணம் கிரகப்பிரவேசம் எல்லாம் பண்ணி வச்சிருக்கேன்.. அப்படி ஒன்னு நடந்தாகாரியத்தை சும்மாவே நடத்திக் கொடுத்துடறேன்.. என்றார்.

இல்லே..தட்சணை இல்லாம காரியம் பண்ணக் கூடாது.. என் ஆத்மா சாந்தியடையாது.. இந்த பணத்தை எடுத்துக்கோங்கோ..என் பையன்கிட்ட உங்கப்பா எல்லாம் தந்துட்டார்னு சொல்லிடுங்கோ. என்ன நல்ல படிடா.. அப்பத்தான் பெரிய உத்தியோக கிடைக்கும்னுசொன்னேன்.. கேக்கலை..

ஆனா அவன் என் செல்ல புள்ளை..கண்களை துடைத்தபடியே

மெல்ல எழுத்து தடியை ஊன்றி நடக்கத் தொடங்கினார். சபேசன்.

  • 115