இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புரிதல்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
ரிஷபம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கூட்டு வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் அகலும். விளையாட்டு செயல்களில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழித்து இருப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
கடகம்
தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எந்த காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பணியாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
வருமானத்தில் திருப்தியான சூழல்கள் அமையும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். துணைவரின் ஒத்துழைப்புகள் மாற்றத்தை உருவாக்கும். பழைய பிரச்சனைகளில் சில தீர்வுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் கடன் உதவிகள் சாதகமாகும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வெளிப்பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் உருவாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மகரம்
குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கும்பம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுகள் பிறக்கும். சேமிப்புகள் மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
வெளியூர் பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலையுயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்