Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். விவசாய பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணி சார்ந்த சில முயற்சிகள் கைகூடும். கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுவது அவசியமாகும். வியாபாரத்தில் மத்தியான லாபங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

ரிஷபம்

தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சூழல் உருவாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

உத்தியோகப் பொறுப்புகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கோபம் இன்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். வழக்குகளில் சில திருப்புங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல் ஏற்படும். சிரமம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

சிம்மம்

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆதரவுகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கன்னி

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். வழக்கு தொடர்பான தெளிவுகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பக்தி வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

துலாம்

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் சார்த்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

அதிரடியான சில வியூகம் மூலம் மேன்மை உண்டாகும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

கனிவான பேச்சுக்களால் காரிய அனுபவம் ஏற்படும். பயணங்கள் சாதகமாக இருக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தடைபட்ட தன வரவுகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். மனதளவில் புதிய மாற்றங்கள் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மகரம்

சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். வரவுகளில் சிறுசிறு போராட்டங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். கருத்துக்களை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கும்பம்

எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன மாற்றம் சார்ந்தசிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை குறைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வெளி வட்டார பயணங்களில் கவனம் வேண்டும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு விஷயங்களில் இருந்து தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

  • 395