இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடினமான விஷயங்களை எளிதாக முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான திட்டங்கள் மூலம் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிகாரிகளால் சில காரியங்கள் சாதகமாக முடியும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. கலைத்துறைகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அரசு வழியில் லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்து பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சுப காரியங்கள் கைகூடும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். காப்பீடு பணிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
உத்தியோகத்தில் முக்கியத்துவம் மேம்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் முயற்சி கேட்ப லாபம் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வு உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். முயற்சி குண்டான மதிப்புகள் கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். ஆன்மீக பணிகளில் புரிதல் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். பொதுநல செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
