இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
ரிஷபம்
எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்களில் இருந்த எதிப்புகள் மறையும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ற படி இருக்கும். நெருக்கடியான சில பிரசனைகள் குறையும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
துலாம்
பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
தனுசு
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சேமிப்பு குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
நினைத்த பணிகளை முடிப்பீர்கள். பழைய நினைவுகள் மூலம் சில தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். நவீன யுக்திகள் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
