Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இருந்த கலக்கங்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் அமையும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

உறவினர்களின் வருகைகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

வரவுகள் தாராளமாக இருக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உயரதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சிக்கு ஏற்ற வெற்றிகள் சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். பெரியவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார நிமித்தமான ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். உடல் நலத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் சில மாற்றம் ஏற்படும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். சமுக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

வியாபார பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் காணப்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

விருச்சிகம்

உறவினர்களிடத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புரிதல்கள் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

தனுசு

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். செல்வ சேர்க்கை மற்றும் வசதி வாய்ப்புகள் மேம்படும். அரசு வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான சிக்கல்கள் குறையும். வர்த்தக பணிகளில் தனவரவுகள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகரம்

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வரவுகளில் இருந்த நெருக்கடிகள் ஒரளவு குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். வியாபார பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கும்பம்

குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். நண்பர்கள் உடன் சிறு பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் இடத்தில் சாதகமின்மையான சூழல்கள் அமையும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். எதிலும் விவேகத்தோடு செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 434