Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மேல்நிலை கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். நிலம் மற்றும் வீடு விற்பனையில் பொறுமையை கையாளவும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணம் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

ரிஷபம்

தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இணைய துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருள்கள் மூலம் ஆதாயம் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுபவம் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். பணிபுரியும் இடத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம்

உறவினர்களின் உண்மை நிலைகளை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் சுகந்திர போக்கு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை

கன்னி

அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்களில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். முயற்சி கைக்கூடும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

துலாம்

தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்கும் திறனின் சில மாற்றங்கள் உண்டாகும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

விருச்சிகம்

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில பயணம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். பழைய பாக்கிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். பொருளாதார விஷயங்களை பகிராமல் இருக்கவும். மற்றவர்கள் கருத்துக்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். வர்த்தக முதலீடுகளை குறைத்து கொள்வது நல்லது. தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விளையாட்டான விவாதங்களை தவிர்க்கவும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

பணி புரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியாக இருந்து வந்த பாக்கிகள் கிடைக்கும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வழக்கு விஷயங்களில் இருந்த தாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

குழந்தைகளின் செயல்களில் கவனம் வேண்டும். வியாபர பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். சமூக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

  • 69