இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி எடுப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி கிட்டும். வியாபாரத்தில் அலைச்சல் விலகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. யாருக்காவும் எந்த வகையிலும் உறுதிமொழி தராதீர்.
மிதுனம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர். பணவரவு உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்.
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் டென்ஷன், பணப் பற்றாக்குறை வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். விவாதங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரிப்பர்.
கன்னி: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
துலாம்: தொட்டது துலங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். பூர்வீக வீட்டை சீரமைத்து வீரிவுபடுத்தி கட்டுவீர். நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
கும்பம்: எதிர்மறை சிந்தனை வந்து நீங்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்கவும். பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மீனம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர். ஒருவருக்கொருவர் இருந்த மனஸ்தாபம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.