இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
சமூக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். விருப்பமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த தாமதங்கள் விலகும். கலைத்துறையில் பொறுமையுடன் செயல்படவும். மருமகன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை விலகும். அதிரடியான திட்டங்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகள் இடத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சிம்மம்
பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் வழியில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். கால்நடை வியாபாரத்தில் பொறுமை வேண்டும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். இனிமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
கன்னி
கடன் நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சக ஊழியர்களிடம் சிறு சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். முத்த சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். பயணங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். கால்நடை விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
தொழில் அபிவிருத்தி விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். வீடு மாற்றம் சம்மந்தமான சிந்தனைகள் மனதில் தோன்றும். துணைவருடன் சிறு தூர பயணங்களை சென்று வருவீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். சில பணிகளை நீங்களாக முடிப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகளை கொள்ள வேண்டாம். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். புரிதல் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
கும்பம்
வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பலம் மற்றும் பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
எதிர்ப்புகளால் இருந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை