இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தன வரவுகள் திருப்தியை தரும். புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்ற செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கடகம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். தடங்கள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
பேச்சு வன்மையால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபகாரிய பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வாகன வசதி மேம்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். சக ஊழியர்கள் இடத்தில் வளைந்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். துன்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
 
    
    
    
    
    
 
            
            
        
 Home
                Home
            