Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

ரிஷபம்

இழுபறியாக இருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும். காப்பக தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்

 

மிதுனம்

சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். குழந்தைகளுக்கு சுப காரிய எண்ணங்கள் சாதகமாகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சமாளிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கடகம்

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குறுகிய தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சொத்துப் பிரிவினைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் திறமைகள் வெளிப்படும். ஓய்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

சிம்மம்

பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பிறமொழி பேசும் நபர்களின் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்துகொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். சிந்தனை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

 

கன்னி

பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலையில் காணப்படும். செயல்பாடுகளில் இருந்த தாமதம் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உடன் பணிபுரிபவர்கள் மூலம் சிறு மனக்கசப்புகள் நேரிடலாம். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 

 

துலாம்

சகோதரர் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத்துணையுடன் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சில அனுபவங்கள் மூலம் புதுவிதமான கண்ணோட்டம் உருவாகும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

குடும்பத்தில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

மகரம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பயணம் சார்ந்த செயல்களால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

கும்பம்

புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள்

 

மீனம்

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அறிமுகமில்லாதவர்களின் உதவிகள் கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகளும், ஒத்துழைப்பும் மேம்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 539