இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சகோதர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். வேகத்தை விட விவேகம் நன்மை தரும். வாகன மாற்ற எண்ணங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறுசிறு ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் உடல் அசதிகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வருங்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் சிறு சிறு வேறுபாடுகள் உண்டாகலாம். முன் கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
பணிகளில் முயற்சிக்குண்டான பாராட்டுகள் கிடைக்கும். உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு செயல்களில் கவனம் வேண்டும். சகோதர உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
வெளியூர் சார்ந்த பணிகள் சாதகமாகும். தர்க்க வாதங்களில் கவனம் வேண்டும். ரகசியமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். சில தடைகள் மூலம் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் மீதான ஈர்ப்பு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
கன்னி
எதிர்பாராத சில அதிர்ஷ்டகாரமான வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் ஏற்படும். தொழில் முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
மற்றவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். வேகத்தை விட விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். தாய் மாமனிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கும்பம்
வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சமூக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சிலரின் சந்திப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
