Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகள் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

ரிஷபம்

கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். நன்மை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை ஆபரணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

சிம்மம்

அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கன்னி

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவினங்களை அறிவீர்கள். தோற்ற பொழிவில் சில மாற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். மனத்தில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

தனுசு

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கும்பம்

நண்பர்களுக்கு இடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மீனம்

தேக ஆரோக்கியம் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 70