Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவாசாய பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

ரிஷபம்

திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்விகத்தால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். எதிர்கால தொடர்பான தெளிவுகள் பிறக்கும். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புத்திரர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எளிமையான பணிகளை கூட தாமதமாக முடியும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வம் இன்மை குறையும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனை கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த முயற்சிகளில் விழிப்புணர்வு வேண்டும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உறவினர்களிடமிருந்த வேறுபாடுகளுக்கு குறையும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சிம்மம்

கனிவான பேச்சுக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கன்னி

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்

மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

அதிஸ்ட எண் : 2

அதிஸ்ட நிறம் : வெண்மை

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும். துறை சார்ந்த நிபுணத்துவம் மேம்படும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்களை செய்வீர்கள். அரசு வகை குழுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் திருப்தியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

தனுசு

நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முயற்சியால் மாறுபட்ட சூழல் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். உத்தியோகம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மகரம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்காங்களை அறிவீர்கள். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன் செயல்படவும். தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். விளையாட்டான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்

வாழ்க்கை துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சகப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னபிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 107