இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தேக நலனில் கவனம் வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு சிறு வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். சலனமான சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
ரிஷபம்
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். கலை பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
மிதுனம்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
இழுபரியான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். சிறு தூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உருவாகும். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகள் கொடுப்பது நல்லது. செயல்களில் ஒருவிதமான ஆர்வம் இன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் காணப்படும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்புகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அனுபவங்கள் கிடைக்கும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கையாளவும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். நம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
காப்பீடு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைக்கூடி வரும். கற்றல் திறனில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அணுகு முறையில் சில மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
மகரம்
செயல்களில் இருந்த மந்த தன்மை விலகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வேலை ஆட்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
வியாபாரத்தில் ஏற்ற இறுக்கமான சூழல் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமையை கையாளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.பூர்விக சொத்துக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். புதுவித அனுபவங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு