மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
ரிஷபம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரிப்பர்.
கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்.
சிம்மம்: பிள்ளைகளால் பொருட் செலவு வரக்கூடும். சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுங்கள். வியாபாரத்தில் திடீர் முடிவுகள் வேண்டாம். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
கன்னி: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக வீடு விற்பனையாகும். வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
துலாம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
மகரம்: புதிய எலட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிட்ட வேலையை போராடி முடிப்பீர். கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் வரலாம். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் லாபம் தரும்.
மீனம்: எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். மனை, விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் பெருமையடைவீர்கள்.