இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் சாதகமாக சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஆதரவுகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம்
நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். உத்யோகத்தில் உயர்வுகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பின்னணியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கன்னி
உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். அரசால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பற்றிய புரிதல் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பகள் கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்கிவீர்கள். அலுவலகத்தில் சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இனத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். சுப முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
குடும்பம் பற்றிய சிந்தனை அதிகமாகும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் குறையும். சகோதரிக்கு சுபகாரிய ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனை போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதக்கம் இன்றி செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்