Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவுகள் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: புதியவர்கள் நண்பர்களாவர். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசார விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்புயரும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர் நட்பு கிட்டும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். புதிய பங்குதாரர் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பணிகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிட்டும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

விருச்சிகம்: மனக்குழப்பம், அலைச்சல் வந்து போகும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: தாழ்வு மனப்பான்மை நீங்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர்கள். பழைய நண்பர்கள் உதவி நாடி வருவர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.

கும்பம்: இழுபறியாக இருந்து வந்த கட்டுமானப் பணிகள் முடிவடையும். தொட்டது துலங்கும். தடைகள் விலகும். அரசு தொடர்பான காரியங்கள் உடனடியாக நிறைவேறும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.

மீனம்: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 67