இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வீடு, வாகன பழுதை சரி செய்வீர்கள். தந்தை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். அரசு வழியிலான செயல்களில் சில தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சஞ்சலம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
நண்பர்களிடையே இருந்த வேறுபாடுகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பாராத சில மாற்றங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். அதிகாரிகளிடத்தில் மதிப்புகள் உயரும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். குழந்தைகள் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பணியாளர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கன்னி
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிந்தனைகளில் புதிய பொழிவுடன் செயல்படுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
துலாம்
குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். பயணம் தொடர்பான செயல்களில் ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும். தொழில் கல்வியில் மேன்மை ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
மனதில் புதுவிதமான தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். புனித தல பயணங்கள் கை கூடும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
தனுசு
நினைத்த பணிகளில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வேலை ஆட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் உருவாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான சில முடிவுகள் பிறக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கும்பம்
கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். பழைய சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். பணி நிமித்தமான புதிய இலக்குகள் பிறக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கலைப் பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு