Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தீரும். இனிமேல் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.

ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் விரும்பிக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகப் பணிகளை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம்: மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கடகம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் சீராகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.

கன்னி: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கையில் காசு, பணம் புரளும். புதிய நபர்களுடன் நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். நீண்டகால சொத்துப் பிரச்சினைகள் தீரும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்துபோகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பல வகையிலும் பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மன நிம்மதி கிடைக்கும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. எக்காரியத்திலும் நிதானம் தேவை.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்கள் பொறுப்பாக நடப்பார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மீனம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் மூத்தோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு கூடும்.

  • 31