Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: திட்டமிட்டபடி வேலை முடியவில்லையே என கோபப்படுவீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

மிதுனம்: பழைய கடனை பைசல் செய்வீர். செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். பிள்ளைகள் தங்கள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கை யாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

கடகம்: திட்டமிட்டபடி செயல்பட்டு சில வேலைகளை முடிப்பதால் மனநிறைவு உண்டாகும். கல்யாண முயற்சி பலிதமாகும். சகோதரரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதம் குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். போட்டிகள் குறையும்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்.

துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர். வங்கியில் லோன் கிடைக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். சொந்த ஊர் பயணங்கள் உற்சாகம் தரும். வியாபாரரீதியாக முக்கிய பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

விருச்சிகம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மூத்தோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர் களை கவரும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.

தனுசு: பழைய பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்ப்பீர். மனைவி, பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலத்தை விற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்களை தேடுவீர். அலுவலகத்தில் உங்களின் உழைப்புக்கு மதிப்பு உண்டு.

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர் கள். அரசால் ஆதாயம் உண்டு. வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

கும்பம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர். இல்லத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர், பழைய நண்பர் கள் தேடி வருவர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்.

  • 45