இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் லாபங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
தொழில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வட்டத்தில் சில புரிதல் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். கருத்துக்கள் பகிர்வதில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடன் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி நிமித்தமான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
மற்றவர்களால் சில பொறுப்புக்கள் அதிகரிக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை தரும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
பூர்வீக சொத்துகளில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் உதவிகளை தேடுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பு மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.நிர்வாக தொடர்பான துறைகளில் மேன்மை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
துலாம்
துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் கவனம் வேண்டும். தடைப்பட்ட பணிகள் முடியும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் இருந்த வருத்தங்கள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகளால் நிம்மதி ஏற்படும். சிக்கல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். விருப்பமில்லாமல் மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம். மறைமுகமான சில விமர்சனங்கள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
தனுசு
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் மறையும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல் உருவாகும். உறவினர்கள் உதவியால் தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
குடும்பத்தினரின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த பணிகள் சாதகமாக முடிவு பெறும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை