இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி
ரிஷபம்
பாகப்பிரிவினைகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் கலகலப்பான சூழல்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பணி நிமித்தமான விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
உறவினர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். மாற்றமான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். வியாபார விருத்திக்கான சூழல் சாதகமாகும். இழுபறியான வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். சஞ்சலம் இல்லாத முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சிம்மம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உறவுகள் இடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார விஷயங்களில் சில புரிதல்கள் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
குடும்ப உறுப்பினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழல்கள் அமையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
துலாம்
பேச்சுக்களில் சற்று விவேகம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். கலைத்துறையில் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
தனுசு
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு பணிகளில் இருந்து தாமதங்கள் மறையும். இழுபறியான பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் கிடைக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் ஏற்படும். தொட்ட காரியங்கள் சாதகமாக முடியும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் மாற்றம் விஷயங்களில் பொறுமை வேண்டும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் மறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் புதிய வியூகங்களை செயல்படுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
தனம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். நேரம் தவறி உணவு உண்பது தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு