Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

ரிஷபம்

தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மிதுனம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். புதிய பொருள்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

ஆடம்பரமான பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சாதகமான சூழல் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் நாட்டம் ஏற்படும். குழந்தைகள் பற்றிய எண்ணம் மேம்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். துன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம்

மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். தந்தை வழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் நற்பெயர்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். விளையாட்டு துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். பத்திரம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் பிறக்கும். வாகன பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

உடன் இருப்பவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்வீர்கள். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்க முடியும். தர்க்க விவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை ஏற்படுத்தும். உத்தியோகப் பணி மாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

தனுசு

திடீர் பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒரு விதமான இறுக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மகரம்

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான பிரசனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். தைரியமான சில முடிவுகளால் மாற்றம் பிறக்கும். அரசு வழியில் இருந்த இழுபறிகள் மறையும். வாகன பழுதைகளை சீர் செய்வீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மீனம்

வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். காப்பகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல்கள் ஏற்படும். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 119