இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்ட காரியத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
பணிபுரியும் இடத்தில் அதிகாரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
எந்த ஒரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் இருக்கங்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுவது நல்லது. அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
தனவரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை விஷயங்களில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலம் ஆதாயகரமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி விஷயங்களில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம், லாபமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கை துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கும்பம்
மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும், ஒத்துழைப்பும் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. சூழ்நிலை அறிந்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்