இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம் : புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. உடல்நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். முன்கோபம் விலகும். வியாபாரம் திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் : துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியா பாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம் : அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வாகன பராமரிப்பு செலவு குறையும். சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம் : குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மூத்த சகோதரர் உதவுவார். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாவர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
சிம்மம் : குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட பணிகளை முடிக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பயணங்களின்போது எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கன்னி : உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்த உறவினர், நண்பர்களின் மனசு மாறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். குடும் பத்துடன் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர். வியாபாரத்தில் போட்டியை சமாளிப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம் : தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். வியாபாரரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். பங்குதாரரின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
விருச்சிகம் : மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். குழப்பங்கள் தீர்ந்து குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர் களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுண்டு. சக ஊழியர்கள் மதிப்பர்.
தனுசு : திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் அறிவுரையை ஏற்று செயல்படவும்.
மகரம் : குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மற்றவர்களை நம்பி சில பணிகளை ஒப்படைத்து, பிறகு அவற்றை நீங்களே முடிக்க வேண்டி வரும். வியாபார ரீதியாக வெளியூர் செல்வீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.
கும்பம் : இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பிரபலங்களால் ஆதாயமுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம் : முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது.குடும்பத்தில் நிம்மதியுண்டு. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.