Feed Item
·
Added a post

கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் வந்து ' விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே 'என்று வேண்டினார்

அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூற. கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார் .

  • 476