Feed Item
·
Added a news

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை 932 தட்டம்மை (Measles) நோய்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த வார இறுதியில் மட்டும் 53 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அல்பெர்டா மாகாண அரசின் தரவுத்தள விவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 40 ஆண்டுகளில் அல்பர்ட்டா மாநிலம் சந்தித்த மிக உயர்ந்த தட்டம்மை பாதிப்பு இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை நோய்தடுப்பை கட்டுப்படுத்துவது சவாலான நிலை” என அல்பெர்ட்டா மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஷெல்லி டுகன் கூறியுள்ளார்.

கனடா 1998 ஆம் ஆண்டு தட்டம்மை நோயாளர்கள் இல்லாத நாடுகளின் வரிசையில் இடம்பிடித்திருந்தது. எனினும், தற்போது நோய் வேகமாக பரவும் நிலை உருவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளதாக அல்பெர்டா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

  • 1053