ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் செல்லும் போது அங்குள்ள சுவற்றில் "அஞ்சிலே ஒன்றை" என்ற பாடல் இருக்கும்...
அதன் அர்த்தம் எவ்வளவு அழகாக தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதியிருக்கிறார் என்பதை காண்போம்!!!.
ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன். அவரைப் பற்றிய தமிழ் ஜால கம்பரின் அருமையான பாடல்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்!!! அஞ்சிலே ஒன்றைத் தாவி!!!
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி!!!
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்!!!
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!!!
அழகு தமிழின் பொருள்:-
(அஞ்சி =ஐந்து)
அஞ்சிலே ஒன்று பெற்றான் (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றில் காற்றுதன்மையாகிய வாயு பகவான் பெற்றெடுத்த பிள்ளை)
அஞ்சிலே ஒன்றைத் தாவி (ஐம்பூதங்களில் ஒன்றான நீர் தன்மையாகிய சமுத்திரத்தை தாண்டி ஆகாய மார்க்கமாக )
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்காக்க ஏகி (ராமன்,இலக்குவன்,பரதன், சத்ருக்ணன் சகோதரர்கள் நான்கு பேர் இருக்க இராமரால் கட்டி தழுவப் பட்ட குகன் ஐந்தாம் சகோதரனாகி, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆறாவதாக சேர்ந்தவர் இவர். இவர் தனது உயிருனும் மேலான இராம பிரானின் உயிர் காக்க சீதையை தேடி சென்றவர்)
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு (ஐம்பூதங்களில் ஒன்றான நிலதன்மையாகிய பூமித் தாய் பெற்றெடுத்த பெண் சீதை, அணங்கு: பெண் அந்த சீதையை கண்டுபிடித்து வந்தவன்)
அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் (அயலார்: மற்றவர்; ) இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பு தன்மையாகிய அக்கினியை வைத்து அந்த ஊரையே தீக்கிரையாக்கியவர்)
அவன் எம்மை அளித்துக் காப்பான் இத்தகு பெருமைகள் உடையவர்.
பாடலில் யார் இவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், இது அனுமரே!.
அந்த அனுமர் பெருமான் நமக்கு வாழ்வு அளித்து காப்பார்.ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் செல்லும் போது இந்த பாடலை பாடியவாறு வலம் வருவோம்.