Feed Item
·
Added a news

கனடா தனது மேற்கு கடற்கரைக்கு புதிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி குழாய் ஒன்றை விரைவாக அமைக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மார்க் கார்னி இந்த திட்டத்தை தேசிய நலன் கருதிய திட்டமாக அறிவித்துள்ளார். இந்த Pacific Link குழாய் தினமும் 10 லட்சம் பீப்பாய் எண்ணெயை கொண்டு செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் கனேடிய டாலர் GDP மற்றும் 1,40,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது

கனடா தற்போது தனது எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்காவிற்கே அனுப்பி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் பொருளாதாரத்தை பன்முகப்படுத்த இந்த திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த குழாய் மூலம் ஆசிய சந்தைகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கை தாண்டி எண்ணெய் தேடும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்

  • 26