Feed Item
·
Added a post

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழும் ஒரு மகனுக்கு ஒரு தந்தை எழுதும் கடிதம்)

-அன்பு மகனுக்கு உன் அப்பா எழுதுவது..."

படிப்பில்லாமல் நான் பட்ட கஷ்ட்டங்களை யெல்லாம் நீயும் பட்டுவிடக்கூடாது. வெளிநாட்டில் படித்து நீ முன்னே வேண்டுமென்று..." இரவும்,பகலுமாய் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை அனுப்பி வைத்தேன்..."!!

ஆனால் நீயோ அதில் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...! (என்னையும் மறந்து)

உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது உன் நினைவாக "தென்னங்கன்றை" வைத்தேன்..."!

அதுகூட வளர்ந்து மரமாகிவிட்டது. உன்னை நினைத்து மனம் நெறுப்பாய் சுடும் போதெல்லாம் ஆறுதல் சொல்ல உன் பிம்பம் இல்லாவிட்டாலும்..." இந்த மரத்தின் நிழலால் குளிர்ச்சி தரும்..."!

அங்கு கிடைக்கும் பணமும், சுகமும் உனக்கு இன்பமூட்டுகிறது...!

இங்கு இந்த மரம் தரும் கனியும், நீரும் என் பசியைப்போக்குகிறது...!

நீ "ஈ மெயிலில்" மூழ்கிக்கொண்டிருக்கும் நேரம்..."

என் மீது "ஈ" மொய்த்த செய்தி வந்து சேரும்...!

என் இறுதி ஊர்வலத்திற்காகவும் நீ வரமாட்டாய் என்றாலும் பரவாயில்லை மகனே..."!

என்னை சுமந்து செல்ல தென்னை ஓலை இருக்கிறது..."!!

நான் உனக்கு கற்றுத்தந்தேன் வாழ்க்கை இது தானென்று...!

நீ எனக்கு கற்றுத்தந்தாய் உறவுகள் இதுதானென்று..!!

  • 778