Feed Item
·
Added a news

கனடாவின் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில் நேற்று நடந்த தேர்தலில், பிரிவினைவாத Parti Québécois கட்சி அதிக இடங்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளது. கட்சித் தலைவர் Paul St-Pierre Plamondon அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார். இது சிறுபான்மை அரசாக இருக்கும் என்று கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றி கனடாவின் தேசிய ஒற்றுமைக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. கியூபெக் பிரிந்து செல்ல வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. பிரதமர் மார்க் கார்னியின் தேசிய ஒற்றுமை செய்திக்கு இது ஒரு பெரிய சோதனையாகும். இது குறித்து CTV News Today தலைப்புச் செய்தியில் "Quebec premier agrees to meet Carney" என்று இன்று காலை வெளியானது.

மேலும், இந்த முடிவு அடுத்த ஆண்டு அல்பர்ட்டாவில் நடக்கவுள்ள பிரிவினை தொடர்பான வாக்கெடுப்புக்கும் முன்னோட்டமாக கருதப்படுகிறது. கார்னி அரசு கியூபெக் நகரில் புதிய பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

  • 53