‘ஜனநாயகன்’ படத்தை திட்டமிட்டபடி வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில காரணங்களால் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
கடந்த 33 ஆண்டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்களிடமிருந்து பெற்ற அன்பு, திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு ஓர் அற்புதமான பிரியா விடை அளிக்கப்பட வேண்டும். அதற்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். நீதித்துறை நடைமுறைகள் மீது நம்பிக்கை இருக்கிறது. விரைவில் படம் வெளியாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்களன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
