Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்கு வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி உறவினர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு உண்டு. வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன் விலகும்.

மிதுனம்: குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

சிம்மம்: மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினை களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீடு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு சகல வசதிகளுடன் வீடு அமையும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

துலாம்: உங்களின் நிர்வாகத்திறன் பளிச்சிடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

தனுசு: சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த தொகை கைக்கு வரும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

கும்பம்: உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: கனிவானப் பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர் கள், நண்பர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். விருந்தினர் வருகை யால் வீடு கலகலப்பாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

  • 35