Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பழைய சிக்கல் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நவீன தொழில் நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மிதுனம்

கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலை மாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கடகம்

பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற வித்தியாசமான புது விதமான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். உடல் உழைப்பிற்கு ஏற்ப முன்னேற்றங்கள் உண்டாகும். மனதில் கற்பனை சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

சிம்மம்

வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். சினம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கன்னி

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

துலாம்

செயல்பாடுகளில் ஒரு விதமான சுறுசுறுமின்மை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருள்கள் மீதான ஈர்ப்பு ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். சிந்தனைப் போக்கில் சில குழப்பம் தோன்றலாம். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உணவு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் சிந்தித்து செயல்படவும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான கலை அறிவு மேம்படும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளையும் பெறுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவுபெறும். சமூக தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கௌரவ பொறுப்புகள் மூலம் செல்வாக்கு மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மீனம்

ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சாமர்த்தியமான செயல்களால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வாகன பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். சிந்தனை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 43