Feed Item
·
Added article

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. மின்விளக்காக சுடலைமாடன் ஜொலிக்க திருவிழா கொண்டாட்டத்துடன், துள்ளல் இசையுடன் தொடங்குகிறது.

இசையின் வேகத்துக்கு ஓடும் வார்த்தைகளை புரிந்துகொள்ள சிரமம் இருந்தாலும், உற்சாகம் உடலோடு ஒட்டிக்கொள்கிறது. அரசல் புரசலாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் தனுஷ், இந்தப் பாடலிலும் அதற்கான அச்சாரத்தை வைத்துள்ளார். அதற்கு சாய் அபயங்கர் பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்.

இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்​திரன்ஸ் உள்பட பலர் நடிக்கின்​றனர். எழிலரசு ஒளிப்​ப​திவு செய்​கிறார். தனுஷின் பிறந்தநாளில் ‘அலாக்கா லோவா சிங்கிள்’ வெளியாகி இருப்பது, அவரின் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது.

  • 46