இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கோபம் குறையும். பணவரவு திருப்தி தரும். பூர்வீக வீடு விற்பனையாகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்கு முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயம் உடனே முடியும். தொழில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கடகம்: பிள்ளைகளால் பெருமையடைவீர். புதிய நிலம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக்கையாண்டு வெல்வீர். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
சிம்மம்: விரயச் செலவுகள் வரக்கூடும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரியின் அறிவுரையை ஏற்று செயல்படவும். பணிச்சுமை அதிகரிக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் முடியும். புதியவர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
தனுசு: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். பழைய கடனை நினைத்து வருந்தாதீர். புதுவழி பிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
கும்பம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த பணிகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவு பெறும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும்.
மீனம்: உடல்நலத்தில் அக்கறை காட்டவும். மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். பங்குதாரர்கள் ஆதரிப்பர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.