Feed Item
·
Added article

🌹சாரதா ஸ்டுயோவில் திருவரூட் செல்வர் படப்பிட்டிப்பில் சிவாஜிகணேசன் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக்கொண்டருந்தார்

🌹படப்பிடிப்பு முடிந்த பிறகு வேடத்தை களைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்

🌹 கார் போக்ரோட்டில் நுழைக்கிறது சிவாஜிகணேசன் டிரைவரிடம்(சிவா)

வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார் டிரைவர் அவ்வாறே செய்கிறார்

🌹எஜமானின் கார் வருவதை கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டை திறக்கிறார் காரில் இருந்து சிவாஜிகணேசன் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்துவிட்டு ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து சென்றார் வாசலை அடைந்ததும் குரலை மாற்றி

🌹அம்மா தாயே என்று குரல் கொடுக்கிறார்

🌹குரலை கேட்டு வருகிறார் ராஜாமணி அம்மையார் அம்மாவை கண்டதும் தாயே நான் ஒரு சிவபக்தன் கைலாய மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் ஒருவாய் சோறு கிடைக்குமா என்று கேட்டார்

🌹பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்

🌹சாமியார் சாப்பிடுவதை பார்த்து நம்ம கணேசன் சாப்பிடுவதை போல இருக்கிறதே என்று கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மையார்

🌹எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர் தன் தாய் முக மாறுதலை கண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்று உணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மையார்

🌹தன் நடிப்பு திறமையலும் பொருத்தமான வேடத்தினாலும் பெற்ற தாயின் கண்களையே ஏமாற்றிவர் சிவாஜி கணேசன்.

  • 77