தெலுங்கு சினிமாவில் பிரபலமான கதாநாயகி பூஜிதா பொன்னாடா தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் சிக்னல் அட் 11:30. இந்தப் படம் இன்று அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மலர்விழி நடேசன் இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பூஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகிய இருவரும் முன்னணி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பூஜிதாவுக்கு இது தமிழில் முதல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் போன்ற முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். திரில்லர் கதைக்களத்துடன் காதல் கலந்த படமாக இது உருவாகியுள்ளது.
பூஜிதா பொன்னாடா தனது இயல்பான அழகாலும், கவர்ச்சியான நடிப்பாலும் தெலுங்கில் பல ரசிகர்களைப் பெற்றவர். தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தில் மிகவும் அழகான தோற்றத்தில் வந்துள்ளார். படத்தின் பாடல்களிலும், காட்சிகளிலும் அவரது தோற்றம் படத்திற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்த்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.