Feed Item
·
Added article

பிரபல நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். தற்போது இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள மாடர்ன் கிளாசிக் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் தடம் பதித்த விஜயலட்சுமி, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான 'சென்னை 28' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதற்காக சில நாட்கள் ரஜினியுடன் இணைந்து நடித்த நிலையில், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து மிஷ்கினின் அஞ்சாதே, வெண்ணிலா வீடு, அதே நேரம் அதே இடம் மற்றும் சமீபத்தில் வெளியான மிடில் கிளாஸ் போன்ற படங்களில் நடித்துத் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் தமிழ் பிக்பாஸ் சீசன் 2ல் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்து கொண்டு, ரசிகர்களின் ஆதரவை பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறி, இரண்டாம் இடத்தை பிடித்தார்.

43 வயதாகும் விஜயலட்சுமி, இயக்குநர் பெரோஸ் முகமதுவை நீண்ட காலம் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிலன் என்ற 9 வயது மகன் உள்ளான். திருமணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தபோதிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார்.

  • 49