Feed Item
·
Added a post

ஒரு வியாபாரி தன் இரு புதல் வர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் ஒன்றாக வாழ்வது கண்டு திருப்தி அடைந்து கண்ணை மூடினான். இறக்குமுன் தன் மூத்த மகனைத் தனியாக அழைத்து "நீ உன் தம்பியோடு சண்டை போடாமல் அனுசரித்துக் கொண்டு போ. அவன் சுபாவம் துடுக்கானது. எனவே அவன் என்ன சொன்னாலும் செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டுபோ" என அவன் கூறினான்.

தன் கணவனின் அண்ணனிடம் மாமனார் ஏதோ கூறுவதைப் பார்த்த இளையவனின் மனைவி தன் மாமனார் பணத்தை எங்கோ ரகசியமாக வைத்திருப் பதைக் கூறுகிறார் என எண்ணினாள். அவளுக்கு வெகு நாளாகவே தனிக் குடித்தனம் நடத்த வேண்டும் என்ற ஆசை. தன் கண்வனிடம் அவள் பல முறை கூறி யும் அவன் அதைக் காதில் போட் டுக் கொள்ளவில்லை.

இப்போது அவள் தன் கணவனிடம் ''பார்த்தீர்களா! பணம் வைத்த ரகசியத்தை உங்கள் தந்தை உங்கள் அண்ணனிடம் தான் சொன்னார். உங்களிடம் சொல்லவில்லை. நீங்கள் அந்தப் பணத்தில் பங்கு கேட்டு வாங்குங்கள். நாம் தனியாகப் போய் சுகமாக இருக்கலாம். இவர்களோடு சேர்ந்து கஷ்டப்படுவானேன்" என்று தினமும் கூறி வரலானாள். இது அவன் மனதிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதியலாயிற்று.

ஏதோ ரகசியமாகச் சொன்னாராமே. அது என்ன?" என்று கேட்டான். அண்ணனும் ''நானும் நீயும் என்றும் ஒற்றுமையாக ஒன்றாகப் பிரியாமல் இருக்க வேண் டும் என்று சொன்னார்" என்றான்.

தம்பியோ "இதை நான் நம்ப மாட்டேன். சரி சரி. நான் தனியாகப் போகிறேன். என் பங்கிற்குப் பணம் கொடு" என்றான். அண்ணனும் "பணம் ஏது? அப்பா எதுவும் வைத்து விட்டுப் போகவில்லையே'' என்றான் ஆனால் தம்பியோ "எல்லாம் எனக்குத் தெரியும், அவர் புதைத்து வைத்த பணத்தில் பாதியைக் கொடு" என்றான்.

அது கேட்டு அண்ணன் திகைத்துப் போனான். பதில் பேசாமல் உள்ளே போய் தன் மனைவியிடம் "உன் நகைகளை எல்லாம் கொடு" என்று அவன் கேட்டான். அவளும் எல்லாவற்றையும் கொடுக்கவே அவற்றை அவன் எடுத்துப் போய் தன்குடும்ப நண்பரும் வட்டிக் கடைக்காரருமான விசுவநாதனிடம் "ஐயா, இந்த நகைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்கள்'" எனக் கேட்டான்.

அவரும் ''பணத்திற்கு அப்படி என்ன அவசரச் செலவு?" என்று கேட்க அண்ணனும் ''இது குடும்ப ரகசியம். எப்படிச் சொல்வது?. என்றான். "இதோ பார், நானும் உன் தந்தையும் நகமும் சதையும் போல இருந்தவர்கள். நீ உன் குடும்ப ரகசியத்தை என்னிடம் சொல்லாவிட்டால் வேறு யாரிடம் சொல்லப் போகிறாய்? தயங்காதே தாராளமாக என்னிடம் சொல்" என்று கேட்டார்.

அப்போது அண்ணன் கண்ணீர் மல்க "என் தம்பி என்னை சந்தேகிக்கிறான். என் தந்தை இறக்கு முன் ஏதோ புதைத்து வைத்த பணம் பற்றி ரகசியமாக என்னி டம் கூறியதாக நினைக்கிறான். எனவே இந்த பணத்தை எடுத்து என் வீட்டுப்பின்புறம் புதைத்து விட்டு அவனிடம் சொல்லி அவனுக்கே இதைக் கொடுத்து விடப் போகிறேன். அப்போதாவது குடும்பத்திலிருந்து பிரிந்து போகாமல் இருப்பானா என்று பார்க்கிறேன்" என்றான்.

விசுவநாதனும் பணம் கொடுக்கவே அண்ணன் அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான். அன்றிரவே யாருக்கும் தெரியாமல் அந்தப் பணத்தை வீட்டின் பின்புறத்தில் ஓரிடத்தில்புதைத்து வைத்தான்.

மறுநாள் காலை அண்ணன் தம்பியை அழைத்து 'தம்பி! என்னை மன்னித்து விடு. நம் தந்தை கூறிய ரகசியத்தை உன்னிடம் சொல்லவில்லை எல்லாம் பணத் தாசை தான். காரணம் அவ்வளவையும் நானே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். சரிவா. பணம் புதைத்து வைக்கப்பட்ட இடத்திற்குப் போகலாம். எல்லாப் பணத்தையும் நீயே எடுத்துக் கொள்" என்றான்.

தம்பியும் "அண்ணா! எல்லாம் எனக்குத் தெரியும். அண்ணியின் நகைகளைக் கொண்டு போய்க் கொடுத்து பணத்தை வாங்கிப் புதைத்து விட்டு நம் தந்தை கூறிய ரகசியம் என்று என்னிடம் சொல்கிறீர்களே. நேற்று விசுவநாதன் என்னை அழைத்து புத்தி மதிகள் கூறி உங்களது உயரிய எண்ணத்தையும் செய்கையையும் கூறினார். எனக்கு புத்தி வந்தது. இனி ஒரு நாளும் தனியாகப் போக வேண்டும் என்று என் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கூற மாட்டேன். நம் தந்தையின் கடைசி விருப்பப்படி நாம் என்றும் ஒன்றாகவே இருப்போம்" என்றான்.

அண்ணன் ஆனந்தத்தால் அப்படியே கட்டித் தம்பியை தழுவிக் கொண்டான்.

  • 118