மயூர பந்தம் என்பது பகை விலக, மாந்திரீக, தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது. பொதுவாகவே முருக பக்தர்களை பில்லி, சூனியம், ஏவல் போன்றவை தீண்டாது , அதிலும் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தத்தை ஒருவர் வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் அவர்களை இந்த மாந்திரீக ஏவல்கள் அறவே அண்டாது என்பது உறுதி.
“வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி “
ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தமானது சகல பிரச்னைகளையும் தீர்க்க வல்லது, இந்த மந்திரத்தை மிகவும் கவனமாகவும் சுத்தமாகவும் பாராயணம் செய்துவந்தால் அனைத்து பிரச்னைகள் மற்றும் தோஷங்களிருந்து விடுபட முடியும் என்பது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாக்கு. இந்த ஸ்லோகத்தை பாராயணம்செய்யும் நாட்களில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் அனைத்து பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டு எல்லா காரியங்களிலும் வெற்றியைக் காணலாம்.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்யும்பொழுது மது பழக்கம், புகை பழக்கம் மற்றும் அசைவ உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில் சென்னையில் உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ளது. பக்தர்கள் இங்குச் சென்று சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசித்து பலன் பெறலாம்.