Feed Item
·
Added a post

1.பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள் பிறரிடமிருந்து கடன் வாங்காதீர்கள். இருப்பதைக் கொண்டு மட்டுமே சிறப்புடன் வாழுங்கள்.

2. ஓட்டு வீட்டில் தரையில் படுத்து உறங்கினாலும் நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள்... கடன் வாங்கி வீடு கட்டி கட்டில் பஞ்சுமெத்தையில் உறங்க வேண்டும் என்று நினைத்த நிம்மதியை இழப்பீர்கள்...

3. பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதைவிட இன்று நமக்கு கடவுள் கொடுத்ததை பலருக்கு கடவுள் கொடுக்காமல் இருக்கிறார் என்று சிந்தித்து பொறாமை குணத்தை விட்டொழியுங்கள்.

4. ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள். உணவிற்கு அதிக தொகையை செலவிடுங்கள்.( நமக்கு சோறு தான் முக்கியம் )

5. உங்களுடைய இலக்கை நோக்கி நீங்க ஓடுங்க இல்லையா நடங்க அதுவும் இல்லையா தவழ்ந்த கூட போங்க. ஆனா எப்பயுமே முயற்சியை விட்டுறாதீங்க.

6. நடந்து முடிஞ்சத நெனச்சி நெனச்சி இருக்கிற காலத்தையும் வீணடிக்காதீர்கள்.

7. கிடைத்த வேலையை சந்தோஷமாக செய்யுங்கள்.பிடித்த வேலைக்கு முயற்சி செய்து கொண்டே இருங்கள். பிடித்த வேலை கிடைக்கவில்லை என்று கிடைத்த வேலையை உதாசீனப்படுத்தாதீர்கள்.

8. 30 வயதுக்கு முன்பே திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் பெண் கிடைப்பது ரொம்ப கஷ்டம் அதை நினைத்து கவலைப்படுவீர்கள்...

9. அம்மா அப்பாவிற்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்.உங்களுக்கு தெரிந்ததை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

10. எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யுங்கள். அனைவரிடமும் அன்பாக சிரித்து பேசி பழகுங்கள்.

வாழ்க வளமுடன் நலமுடன்..

  • 622