Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

ரிஷபம்

புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தலாம். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது திருப்தியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

சிம்மம்

எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக விஷயங்களில் பொறுமை வேண்டும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் சில மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

நட்பு வட்டம் விரியும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நூதன பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

துலாம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சக ஊழியர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

தனுசு

தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகளில் விரயங்கள் உண்டாகும். அருகில் உள்ளவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயணம் மூலம் பலன்கள் கிடைக்கும். சுயதொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

 

கும்பம்

சகோதரர்களால் சிறு சிறு சங்கடம் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மீனம்

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். பக்தி எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 241