ஒரு நாள் இரண்டு துறவிகள் ஒரு ஆற்றின் கரையில் நடந்து சென்றனர்.
அப்போது அவர்கள், ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு ஊனமான பெண்ணை பார்த்தனர்.
“தயவு செய்து எனக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்ய முடியுமா?” என்றாள்
அதில் ஒருவர் உடனே முன்வந்து, அவளை தோளில் ஏந்தி ஆற்றைக் கடக்கச் செய்தார்.
பின்னர் இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து மற்றொரு துறவியின் மனதில் குழப்பம் தோன்றியது.
அவர் கூறினார், “நீ செய்தது தவறு. எப்படி இருந்தாலும், அவள் ஒரு பெண். துறவியான நீ அவளைத் தொட்டு தூக்கி இருக்க கூடாது.”
அதற்கு அந்த துறவி அமைதியாகச் சிரித்து, “நான் அந்த பெண்ணை ஆற்றின் கரையிலேயே இறக்கி விட்டேன்.ஆனால் நீ இன்னும் அவளை உன் மனதில் சுமந்து கொண்டு செல்கிறாய். நீயும் கீழே இறக்கி விடு,” என்றார்.