Feed Item
·
Added a post

வெயில் காலத்தில் வரும் தோல் அரிப்பு, படர்தாமரை, தோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்.

மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.

🟠 பூவரசங் காய்

பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.

🟠 சந்தனம்

சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.

🟠 குப்பை மேனி

ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.

தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.

🟠 கீழாநெல்லி

கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும்.

🟠 பூண்டு

பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும்.

🟠 தும்பை இலைகள்

தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில் குணமாக்கும்

  • 48