வெள்ளாவி வெச்சு வெளுத்தது போல, பல பலனு இருக்கும் ராய் லட்சுமிக்கு சொந்த ஊர் பெங்களூர். இவருக்கு சிறுவயதில் இருந்தே, சினிமா மீது ஆர்வம் இருந்ததால், பள்ளியில் படிக்கும் போதே பல படங்களை விரும்பி பார்த்துள்ளார். கல்லூரிக்கு சென்ற பின் அந்த ஆசை அதிகமாக, தனது ஆசையை பூர்த்திக் செய்து கொள்ள படித்துக்கொண்டு இருந்த போதே, மாடலிங்கில் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கம்பேனிகளின் விளம்பரத்தில் நடித்து வந்த ராய் லட்சுமிக்கு புரூ காஃபி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தின் மூலம் பிரபலமான இவர், சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரம் என அடுத்தடுத்த விளம்பரத்தில் நடித்தார்.
விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பால், கற்க கசடற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்விப்படமானது. இதனால், அடுத்த படத்திற்காக காத்திருந்த ராய் லட்சுமிக்கு, தமிழில் படவாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் வாய்ப்பு தேடினார். அங்கு, காஞ்சனா கேபிள் டிவி என்ற படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே பாடல் இவருக்கு தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடத்தை பிடிக்கவைத்தது. அதைத்தொடர்ந்து முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இவர் நடித்த எந்த படமும், இவருக்கு ஒரு அடையாளத்தை தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், வலுவான கதை அமையாததால் சினிமாவில் உச்சத்தை இவரால் முடியவில்லை.
தமிழ், தெலுங்கு என எதுவும் வேலைக்கு ஆகாததால், பாலிவுட் சென்ற லட்சுமி ராய், அங்கு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டார். அங்கு பெயரை சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் பணத்தை சம்பாதித்தார். பின் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். கடந்த ஆண்டு ராய் லட்சுமி மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். எந்த பக்கம் போனாலும், பட வாய்ப்பு வராததால், எப்போதுமே ஜாலியாக டூர் சென்று பொழுதை கழித்து வருகிறார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு, கடற்கரையில் கவர்ச்சி உடைஅணிந்து கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ராய் லட்சுமி, அந்த பதிவில் காலம் மெதுவாகும், காற்றில் உப்பு மற்றும் அமைதியின் வாசனை வீசுகிறது. அழகு சத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதை உணர வேண்டும் என்பதை அமைதியான நினைவூட்டுகிறது என பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப்பார்த்த பலர், அடடா கவிதை கவிதை என பதிவுகளை போட்டு வருகின்றனர்.